நாடு முழுவதும் கொரோனா காரணமாக ரயிலில் பல சேவைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது நிலைமை சீரான நிலையில் மீண்டும் பல்வேறு சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அதாவது பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை தவிர பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைக்காக பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
இது குறித்து அண்மையில் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் கொரோனா பாதிப்பு வருவதற்கு முன்பு மூத்த குடிமக்கள் ரயில்களில் டிக்கெட் தள்ளுபடியை பெற்று வந்தனர். அது கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது 2022 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் விலக்கு அளிக்கப்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. ஆனால் இது போலியானது என்று தற்போது தெரியவந்துள்ளது.
இது போன்ற எந்த ஒரு அறிவிப்பையும் ரயில்வே நிர்வாகம் வெளியிடவில்லை. இது ஒரு போலியான தகவலாகும். இந்த விவகாரம் தொடர்பாக PIB Fact Check ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று போலீஸ் செய்தி பரவுகிறது. இது முற்றிலும் தவறானது.அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.