பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் என்பவர் ரயிலில் உள்ளாடையுடன் நடந்து சென்ற சம்பவம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல். இவர் நேற்று முன்தினம் இரவு பாட்னா-டெல்லி தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது தனது மேலாடையை கழற்றி விட்டு பனியன் மற்றும் உள்ளாடையுடன் அங்குமிங்கும் நடந்துள்ளார். மேலாடைகளை கழட்டிவிட்டு வெறும் பனியன் மற்றும் உள்ளாடையுடன் நடந்து சென்ற சம்பவம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் இதனை எதிர்த்து கேட்ட பயணிகளுடன் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அனைவரையும் சமாதானம் செய்தார்.
பின்னர் அவர் மற்றொரு பெட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து எம்எல்ஏ கோபால் மண்டல் தெரிவித்துள்ளதாவது: “நான் ரயிலில் பயணம் செய்த போது திடீரென்று வயிறு கோளாறு காரணமாக கழிவறைக்கு செல்ல வேண்டியிருந்தது. அதனால் தான் அணிந்திருந்த குர்தா மற்றும் பேண்டை கழட்டிவிட்டு அவசரமாக சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னை நிறுத்தி கேள்வி எழுப்பினார். பிறகு ரயில்வே போலீசார் வந்து கேட்ட போது நான் அவரை தள்ளி விட்டதாக பொய் கூறினார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.