Categories
சினிமா தமிழ் சினிமா

ரயிலில் ஏற்பட்ட மாரடைப்பு … பிக்பாஸ் அனிதாவின் தந்தை திடீர் மரணம்… குடும்பத்தினர் அதிர்ச்சி…!!!

பிக்பாஸ் அனிதாவின் தந்தையும் ,பத்திரிக்கையாளரும் ,எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் . 84 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த அனிதா மக்களில் குறைவான வாக்குகளை பெற்று கடந்த வார இறுதியில் வெளியேற்றப்பட்டார் . புத்தாண்டை எனது குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என நினைப்பதாக தெரிவித்த அனிதா வீட்டில் எதிர்பாராத துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது .

anitha sampath father death: பிக் பாஸ் அனிதா சம்பத்தின் அப்பா திடீர் மரணம்!  - anitha sampath's father rc sampath passes away | Samayam Tamil

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்தின் தந்தையும், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவர் தனது மகனுடன் சீரடி சென்று திரும்பும் வழியில் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் . இந்த திடீர் மரணம் அனிதா சம்பத் குடும்பத்தினருக்கு  அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . சமூக வலைத்தளங்களில் அனிதா சம்பத் தந்தை மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |