மும்பை தாதர் ரயில் நிலையத்தில் தக்க நேரத்தில் செயல்பட்ட டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
மும்பை தாதர் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் ஓடும் போது அதில் ஏற முயற்சி செய்த பயணி ஒருவர் கால் தவறி பிளாட்பாரத்தில் விழுந்து விட்டார். இதற்கிடையில் சற்றே தாமதம் ஆகி இருந்தால் அந்த பயணி ரயில் தண்டவாளம் அடியில் சிக்கி இருக்கக்கூடும். ஆனால் அங்கு இருந்த டிக்கெட் பரிசோதகர் நாகேந்திர மிஸ்ரா என்பவர் பயணியை தண்டவாளத்தில் விழாமல் இழுத்து காப்பாற்றினார். இவ்வாறு பரிசோதகர், பயணியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.