ரயிலில் குளிசாதனை எந்திரம் பழுதானால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக சென்றது.
பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் மதியம் 2:50 மணி அளவில் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி புறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் பங்காரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்ற பொழுது குளிர்சாதன பெட்டியில் குளிர்சாதன எந்திரம் வேலை செய்யவில்லை. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதனால் ஜோலார்பேட்டை ரயில் நிலைய ஐந்தாவது பிளட்பாரத்தில் ரயில் நிறுத்தப்பட்டு ரயில்வே ஊழியர்கள் குளிர்சாதனை இயந்திரத்தை சரி செய்ய முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இதையடுத்து சென்னை மற்றும் பெங்களூரு பகுதியில் மட்டுமே இதற்கான வசதிகள் உள்ளதால் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அவ்வழியாக சென்ற மைசூர்-சென்னை இடையேயான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பெங்களூரு-சென்னை இடையேயான மற்றொரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக குளிர்சாதன பெட்டியில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இதனால் ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்னையை நோக்கி சென்றது.