இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். அப்படி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா வேண்டாமா என்ற சந்தேகம் கட்டாயம் இருக்கும். பேருந்துகளில் பயணிக்கும் போது குழந்தைகளுக்கு அரை டிக்கெட் வழங்கப்படும். குறிப்பிட்ட வயதுக்கு பிறகு முழு டிக்கெட் எடுக்க வேண்டும்.
அதனைப் போலவே ரயில்களிலும் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுப்பதில் பல விதிமுறைகள் இருக்கின்றன. பலரும் சிறு குழந்தைகளுக்கு டிக்கெட் புக்கிங் செய்வதில்லை. அவர்களது சீட்டிலேயே குழந்தையை வைத்துக் கொள்வார்கள். அதனைப் போல டிக்கெட் எடுக்காமல் குழந்தையை ரயில்களில் கூட்டி சென்றால் ரயில்வே அதிகாரிகள் அனுமதிப்பார்கள்.
இந்நிலையில் ஐந்து வயதுக்கு குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு ரயிலில் டிக்கெட் கட்டணம் இல்லை என்றும் அவர்கள் இலவசமாக பயணிக்கலாம் எனவும் அந்த குழந்தைக்கு தனியாக சி வேண்டும் என்றால் அவர்கள் பெயரில் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும் எனவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அப்படி தனி சீட் புக்கிங் செய்தால் அவர்களுக்கு என தனி சீட் வழங்கப்படும்.
சீட் புக்கிங் செய்யாவிட்டாலும் அந்த குழந்தைகளை உடல் அழைத்துச் செல்லலாம். இந்திய ரயில்வே டிக்கெட் புக்கிங் முறையில் புதிதாக infant என்ற வசதியை சேர்த்துள்ளது.அதில் புக்கிங் செய்யும்போது குழந்தைக்கான சீட்டுக்கு பாதி கட்டணம் வசூல் செய்யப்படும்.ஆனால் நீங்கள் முழு சீட்டையும் விரும்பினால் முழு டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.