Categories
தேசிய செய்திகள்

ரயிலில் சத்தமாகப் பேசினால், பாட்டு கேட்டால் அபராதம்…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…..!!!!

ரயிலில் பயணம் செய்யும் போது சத்தமாக பாட்டு கேட்பதற்கும், செல்போனில் சத்தமாக பேசுவதற்கும் தடை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதர பயணிகளுக்கு தொல்லை தரும் செயல்களுக்கு ரயில்வே நிர்வாகம் தடையும், அபராதமும் விதித்துள்ளது. அதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் எந்த ஒரு பயணியும் தனக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களுக்கு பொறுப்பு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் விளக்குகள் எரிய விட கூடாது என்றும் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |