வரும் நவம்பர் 4-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவதுதான். காற்று மாசு மற்றும் தொற்று காரணமாக கடந்த ஆண்டு பல மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதே போல இந்த ஆண்டும் சில மாநிலங்களில் பட்டாசுகளை வெடிக்க மற்றும் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயிலில் செல்பவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் ரயிலில் பயணிகள் யாரும் பட்டாசு எடுத்துச் செல்லக் கூடாது, மீறினால் ரயில்வே சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் நவம்பர் ஐந்தாம் தேதி வரை சென்னை புறநகர் மின்சார ரயில்களிலும், மற்ற ரயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.