Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் தோள் பையை தவறவிட்ட பயணி…. துரிதமாக செயல்பட்ட போலீசார்…..!!!!!

சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையில் வந்து நின்றது. அவற்றில் படுக்கைவசதி கொண்ட பெட்டியில் பயணம் மேற்கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்த சிபு ஜார்ஜ் (45) என்பவர் தான் வைத்திருந்த தோள் பையை ரயிலிலேயே தவறவிட்டு சென்று விட்டார்.

இதனிடையில் அந்த ரயிலை சோதனையிட்ட காவல்துறையினர் கருப்புநிற தோள்பை ஒன்று படுக்கை வசதி பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை கண்டனர். அதன்பின் காவல்துறையினர் அந்த பையை கைப்பற்றி நடத்திய விசாரணையில் அது சிபு ஜார்ஜ் உடையது என்பது தெரியவந்தது. அதில் கை கடிகாரம், ஹெட்செட், வங்கி புத்தகம், 32 ஜி.பி.மெமரி கார்டு, செல்போன் உட்பட ரூபாய் 88 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அந்த தோள்பையை அதிலிருந்த பொருட்களுடன் பத்திரமாக சிபு ஜார்ஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

Categories

Tech |