Categories
பல்சுவை

ரயிலில் பயணிக்கும் போது செல்போன் கீழே விழுந்து விட்டதா….? நாம் என்ன செய்ய வேண்டும்….? பயனுள்ள தகவல் இதோ…!!

நாம் ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக செல்போன் தவறி கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்..? சில பேர் ரயிலில் இருக்கும் எமர்ஜென்சி செயினை பிடித்து இழுத்து விடுவார். அப்படி செய்யும்போது சில நேரங்களில் அபராத தொகையை கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் அல்லது சிறை தண்டனை அனுபவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. முதலில் நாம் செய்யவேண்டியது, நாம் எந்த இடத்தில் செல்போனை தவற விட்டோமோ அதற்கு அடுத்து வரும் எலக்ட்ரிக் கம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு 182 என்ற பேசஞ்சர் ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொண்டு எலக்ட்ரிக் கம்பத்தின் நம்பரை தெரிவித்து செல்போன் தவறி விழுந்ததை கூறவேண்டும். அந்த தகவலில் படி ஹெல்ப்லைன் ஊழியர்கள் உங்கள் செல்போனை பத்திரமாக மீட்டு விடுவார்கள். இதனையடுத்து ஸ்டேஷனில் இறங்கி ஹெல்ப்லைன் மூலமாக நாம் தவறவிட்ட செல்போனை பெற்றுக் கொள்ளலாம்.

Categories

Tech |