Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ரயிலில் வாட்ஸ்அப் மூலமே சாப்பாடு…. ஆர்டர் செய்வது எப்படி…? ரொம்ப ஈஸி தான்…!!!!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) உணவு விநியோக சேவையான Zoop, ரயில்களில் எளிதான மற்றும் வசதியான உணவு விநியோக சேவைகளை வழங்குவதற்காக Jio Hapik உடன் கூட்டு சேர்ந்துள்ளது. யனர்கள் இப்போது வாட்ஸ்ஆப்-ஐ பயன்படுத்தி தங்கள் ரயிலில் உணவை ஆர்டர் செய்யலாம், இது பயணிகள் தங்கள் பயணத்தின் போது அவர்களின் PNR எண்ணைப் பயன்படுத்தி தங்கள் இருக்கைகளுக்கு நேரடியாக உணவைப் பெற வழிவகை செய்கிறது.

ஜூப் செயலியைப் பதிவிறக்கம் செய்யாமலேயே பயணிகளின் பயணத்தின் ஒரு பகுதியாக வரவிருக்கும் எந்த நிலையத்திலும் தங்கள் உணவை டெலிவரி செய்ய இந்த சேவை உதவுகிறது. சாட்போட்டைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் உணவு விநியோகம் குறித்த நிகழ்நேர புதுப்பிப்புகளையும் பார்க்கலாம். மேலும், பயனர்கள் கருத்துக்களை வழங்கவும், அவர்களின் ஆர்டருக்குத் தேவையான தகவல்களை பெறவும் முடியும்.

ரயில் பயணத்தின் மூலம் வாட்ஸ்அப் மூலமே பயணிகள் உணவை ஆர்டர் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஆர்டர் செய்வதற்கு, வாட்ஸ்அப் ஜூப் (zoop) சென்று +91 7042062070 என்ற எண்ணிற்கு மெசெஜ் செய்ய வேண்டும். பின்னர் உங்களது 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை பதிவிட வேண்டும். பின்னர் அடுத்து வரும் ரயில் நிலையத்தை குறிப்பிட்டு, உங்களது உணவை ஆர்டர் செய்துகொள்ளலாம். பயனுள்ள தகவல் என்றால் பிறருக்கும் பகிருங்கள்.

Categories

Tech |