Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயிலை தடுத்து நிறுத்திய வட மாநில வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் ரயில் நிலையத்திலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று மதியம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து ரயில் காட்பாடி நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் கண்ட காலத்தில் நடுவில் நின்று கொண்டு வழிமறித்தார்.

இதனை பார்த்ததும் எஞ்சின் டிரைவர் பலத்த சத்தத்துடன் ஹாரன் அடித்தும் அந்த வாலிபர் தண்டவாளத்தை விட்டு நகரவில்லை. இதனால் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரயில்வே ஊழியர்கள் அந்த வாலிபரை உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால் 10 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த அந்த வாலிபருக்கு சற்றுமான நலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரை வாணியம்பாடி பகுதியில் இருக்கும் கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |