Categories
மாநில செய்திகள்

ரயிலை தாக்கி அத்துமீறிய பாமக… 350 பேர் மீது போலீஸ் வழக்கு…!!!

சென்னையில் நடந்த போராட்டத்தில் கற்களை வீசி இரயிலை தாக்கிய புகாரில் பாமகவினர் 350 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வன்னியர் சமூகத்தினர் 80களில் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 89ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு வன்னியர் உள்ளிட்ட ஜாதியினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் மிக பிற்பட்டோர் மக்கள் தொகையில் 75% இருக்கும் வன்னியருக்கு 7 முதல் 8 சதவீதம் அளவு வரையில் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறது.

அதனால் சென்னையில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி நேற்று போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் பெருங்களத்தூர் அருகே கற்களை வீசி பாமகவினர் ரயிலை தாக்கினர். அதனால் 350 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஜிஎஸ்டி சாலை, இரணியம்மன் கோவில், பம்மல் உள்ளிட்ட இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்ட 1648 பாமகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |