இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிரீமியம் ரயில்களில் டீ,காபி மற்றும் தண்ணீருக்கு வசூலிக்கப்பட்டு வந்த சேவை கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ ஆர் சி டி சி நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கட்டடம் தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் ராஜதானி, சதாப்தி, துரோண்டோ,வந்தே பாரத் ஆகிய பிரீமியம் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய விதிமுறைகளின் படி பிரீமியம் ரயில்களில் டிக்கெட் பதிவு செய்யும் போது உணவிற்கும் சேர்த்து பதிவு செய்யாத பயணிகள் உணவு ஆர்டர் செய்தால் கூடுதலாக 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும்.
இருந்தாலும் பிரீமியம் ரயில்களில் டீ, காபி மற்றும் தண்ணீருக்கு சேவை கட்டணம் வசூல் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.