ரயிலில் தீ விபத்தை தடுப்பதற்காக இரவில் பயணம் செய்பவர்கள் செல்போன் மற்றும் லேப்டாப்புகளில் சார்ஜர் செய்ய ரயில்வே நிர்வாகம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
ரயிலில் பயணம் செய்பவர்கள் இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணிவரை லேப்டாப், செல்போன் போன்றவற்றை சார்ஜ் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதற்காக குறிப்பிட்ட ஆறு மணி நேரத்தில் பிளக் பாயிண்டில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.