Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரயில்ல எப்படி இப்படி நடந்திருக்கும்…. அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் ரயிலில் இருந்து ஆண் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்திற்கு கடந்த 3 ஆம் தேதி தாதரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இந்நிலையில் தற்போது அவ்வண்டி தாதருக்கு திரும்பி செல்ல வேண்டும். இதனால் ரயில்வே ஊழியர்கள் ரயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ்-2 பெட்டியிலிருக்கும் 67 ஆம் நம்பர் இருக்கையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதை கண்டு ரயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இத்தகவலினடிப்படையில் காவல்துறையினர் அப்பெட்டிக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |