ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இருக்கும் லட்சுமணன் என்பவரின் மகன்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கிய தருவதாக மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன், ரகு, கோவிந்தன் மற்றும் கல்லடிபட்டியை சேர்ந்த சந்தானம் உள்ளிட்ட நான்கு பேரும் ஆசை வார்த்தை கூறி வேலை வாங்கி தருவதற்காக மூன்று லட்சம் கேட்டிருக்கின்றனர்.
இதையடுத்து லட்சுமணனும் மூன்று லட்சத்தை கொடுத்த பின் அவர்கள் பணி நியமன ஆணைக்கான சான்றிதழ்களை வழங்கியதையடுத்து லட்சுமணன் தனது மகன்களுடன் சென்னையில் இருக்கும் தென்னக ரயில்வே அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ்களை காட்டிய பொழுது அது போலியானது என தெரியவந்தது. இதையடுத்து லட்சுமணன் நான்கு பேரிடம் சென்று பணத்தை திருப்பி கேட்ட பொழுது பணம் தர மறுத்தும் கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர். இதனால் லட்சுமணன் நான்கு பேர் மீதும் போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.