Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 27 லட்சம் மோசடி”…. சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை….!!!!!!!!!

நெய்வேலியில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெய்வேலி 17ஆவது வட்டம் பண்ருட்டி சாலையில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஸ்ரீதரன் என்ற ஸ்ரீதர் (26). எம் பி ஏ பட்டதாரியான இவர் நெய்வேலியில் சொந்தமாக தொழில் செய்து வருகின்றார். இதே போல 13வது வட்டம் ஸ்டீல் லேன் தெருவில் ஜோசப் பீட்டர் ஆண்டனி என்பவர் வசித்து வருகிறார். இவர் என்எல்சி இந்திய நிறுவனத்தில் முதலாவது நிலக்கரி சுரங்கத்தில் உள்ள லிக்னைட் பகுதியில் ஊழியராக பணியாற்றி வருகின்றார்.

இவரும் ஸ்ரீதரனும் குடும்ப நண்பர்கள் ஆவர். இந்த சூழலில் ஜோசப் பீட்டர் ஆண்டனி ஸ்ரீ தரன், அவரது மனைவி ஸ்வேதா போன்றோருக்கு மத்திய அரசின் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ஸ்ரீதரன் கடந்த வருடம் சுமார் 27 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வரை ஜோசப் பீட்டர் ஆண்டனியின் வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த வருடம் மே மாதம் ஏழாம் தேதி ஸ்ரீதரன் அவரது மனைவி சுவேதா போன்றோருக்கு தபால் மூலமாக பணி நியமன ஆணை  வந்துள்ளது. அதனை ஸ்ரீதரன் பார்க்கும்போது அது போலியான நியமன கடிதம் என தெரியவந்துள்ளது. இது பற்றிய அவர் ஜோசப் பீட்டர் ஆண்டனி அவரது மகன் அந்தோணி போன்றவரிடம் கேட்டு சென்று கேட்டுள்ளார்.

அப்போது அவர்கள் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பணத்தை கொடுக்காமல் அவர் தொடர்ந்து ஏமாற்றி வந்திருக்கின்றனர். இது பற்றி ஸ்ரீதரன் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜோசப் பீட்டர் என் எல் சி இல் பணிபுரிந்து வருகிறார் என்பதனால் ஸ்ரீதரன் என்எல்சி யில் ஒற்றாடல் துறைக்கு புகார் அனுப்பியுள்ளார். அதன் பேரில் என்எல்சி ஒற்றாடல் துறையினர் இந்த வழக்கை சிபிஐ அனுப்பி வைத்திருக்கின்றனர். சிபிஐ அதிகாரிகள் போலீசார் நெய்வேலிக்கு வந்து விசாரணை மேற்கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |