Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாட்கள் போனஸ்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

விஜய தசமி பண்டிகைக்கு முன்பாக 2021-22ம் வருடத்திற்கான இரயில்வே ஊழியர்களுக்குரிய 78 தினங்கள் திறமைக்கு ஏற்ற அடிப்படையில் BONUS வழங்குவதற்கு பொருளாதார விவகாரங்களுக்காக அமைச்சரவைக் குழுவானது ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதன் காரணமாக சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் இந்திய இரயில்வேக்கு ரூ.2,000கோடி கூடுதல் செலவு ஆகும். இதுதவிர்த்து மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தியாக 7வது ஊதியக்குழுவின் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 % உயர்வுக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியது. ஏற்கனவே மத்திய அமைச்சரவை 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது 1.156 மில்லியன் நான் கேஸடட் ரயில்வே ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பிடிஐயிடம் கூறினார். முந்தைய வருடம் உற்பத்தித் திறன் சார்ந்த போனஸ் வழங்க கிட்டத்தட்ட ரூபாய்.1,985 கோடி செலவானது. விஜயதசமி மற்றும் தீபாளி பண்டிகைகளுக்கு முன்பாக போனஸ் அறிவிக்கப்படுவது வழக்கம் ஆகும். தகுதியான நான்-கேஸடட் இரயில்வே ஊழியர்களுக்கு PLB செலுத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஊதியக் கணக்கீட்டு உச்ச வரம்பு மாதம் ரூபாய்.7,000 ஆகும். தகுதியான ரயில்வே ஊழியருக்கு 78 தினங்களுக்கான போனஸாக அதிகபட்சம் ரூபாய்.17,951 வழங்கப்படும்.

ரயில்வேயில் உற்பத்தித் திறன் இணைக்கப்பட்ட போனஸ் நாடு முழுதும் பரவியுள்ள RPF/RPSF பணியாளர்களைத் தவிர்த்து அனைத்து ரயில்வே நான்-கேஸடட் ஊழியர்களையும் உள்ளடக்கியது. கடந்த 1979-80ம் வருடத்தில் PLB என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய அரசின் முதல் துறைசார்ந்த நிறுவனமாக ரயில்வே இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் செயல் திறனில் முக்கிய உள் கட்டமைப்பு நிறுவனமாக ரயில்வேயின் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் செயல் திறனில், முக்கியமான உள் கட்டமைப்பு நிறுவனமாக ரயில்வேயின் முக்கியபங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பாக இந்திய ரயில்வே ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NFIR) பொதுச்செயலாளர் ராகவய்யா ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு எழுதிய கடிதத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக முந்தைய ஆண்டுகளைவிட அதிக நாட்கள் போனஸ் ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |