இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே துறையில் புதுப்புது திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில்வே வாரியம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் தங்களின் பாஸ் பயன்படுத்தி பயணிக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் சில பிரிவு பணியாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட வகுப்பில் மட்டுமே பயணிக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் சதாப்தி ராஜஸ்தானி ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வந்தே பாரத் ரயில்களில் இந்த சலுகை அனுமதிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் ரயில்வே துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் பாஸ்களை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.