ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2020- 2021 ஆம் ஆண்டுக்கான ரயில்வே ஊழியர்களின் போன்ஸாக 78 நாள் ஊதியத்தை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என அறியப்படுகிறது. மேலும் அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி அனுராக் தாகூர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.