Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பி”…. பெரும் பரபரப்பு… போலீஸ் சுப்பிரண்ட் நேரில் விசாரணை…!!!!!

சேலத்தில் இருந்து பெங்களூருக்கும் சேலத்தில் இருந்து மேட்டூருக்கும் ரயில்வே தண்டவாளம் செல்கின்றது. நேற்று மாலை ஓமலூர் ரயில்வே மேம்பாலத்தின் நடையில் ரயில்வே தண்டவாளத்தில் சுமார் இரண்டு அடி நீளம் உள்ள இரும்பு துண்டு தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசாருக்கும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ்வுக்கும் ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்தவுடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், துணை போலிஸ் சங்கீதா, ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

மேலும் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த இரும்பு  துண்டுகள் அகற்றப்பட்டுள்ளது. அதனை போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த தண்டவாளத்தில் கடந்த 15 தினங்களாக பராமரிப்பு பணி நடைபெற்று வருகின்றது. அவ்வாறு இருந்தும் தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வீசியவர்கள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |