ரயில்வே துறையில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், Goods Train Manager பதவிக்கு என்று மொத்தமாக 147 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
01.01.2022 அன்றைய நாளின்படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணிக்கு ஏற்றாற்போல் அரசு ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது என்று அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT), Document Verification, Medical Examination அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
https://drive.google.com/file/d/1W-yG784zrZ8sakfZctXGWzOk_to4av9w/view