Categories
தேசிய செய்திகள்

ரயில்வே துறையில் 5ஜி சேவை…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!!!

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் சேவை மற்றும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |