Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நடை மேம்பாலம் இடிந்து விபத்து… 4 பேர் படுகாயம்… இந்திய ரயில்வே இழப்பீடு அறிவிப்பு…!!!!

மராட்டிய மாநிலத்தில் சந்திராபூர் மாவட்டத்தில் நேற்று மாலை 5.10 மணி அளவில் பாலார்ஷா ரயில்வே சந்திப்பில் 2 பிளாட்ஃபாம்களை இணைக்க கூடிய நடை மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து தண்டவாளத்தின் மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடை மேம்பாலத்தில் நடந்து சென்ற 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த நபர்களுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் லேசான அளவில் காயம் ஏற்பட்ட நபர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மத்திய ரயில்வே சார்பாக விசாரணை நடைபெற்றுகொண்டிருகிறது. இது குறித்து ரயில்வே நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “நடை மேம்பாலம் இடிந்து விழவில்லை எனவும் அதிலிருந்து ஸ்லாப் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது” எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |