ரயில்வே டிக்கெட் ரத்து தொடர்பாக ஐஆர்சிடிசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனிடம் ரயில்வே டிக்கெட் முன்பதிவை ரத்து ரத்து செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஐ.ஆர்.சி.டி.சி பெயரில் போலி கஸ்டமர் கேர் நம்பர் மற்றும் மெசேஜ் போன்றவைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நம்பர் மற்றும் மெஸேஜை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் ரயில்வே டிக்கெட் முன்பதிவை ரத்து செய்யும் போது ஐ.ஆர்.சி.டி.சியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள வேண்டும்.
இதற்கு 07556610661, 07554090600 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இதனையடுத்து ரயில்வே டிக்கெட்டை முன்பதிவை ரத்து செய்த பிறகு அதற்கான பணம் டிக்கெட் முன்பதிவு செய்த நேரத்தைப் பொருத்து கிடைக்கும். இது பற்றிய முழுமையான தகவல்களை erail.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம். அதன்பிறகு ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தால், அதற்கான 50% பணம் கிடைக்காது. எனவே ரயில்வே டிக்கெட் முன்பதிவை ரத்து செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.