மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா, புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் அதிகமாக பெருகி விட்டது. மேலும் இதனை சில நபர்கள் எடுத்துக்கொண்டு என்ன செய்கின்றோம் என்று கூட தெரியாமல் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் செல்லூரிலிருக்கும் காவல் துறையினர் அதை பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது தத்தனேரி ரயில்வே பாலத்திற்கு அருகில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.