Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்….. அனைத்து கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிகோடு என்ற பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாகனங்கள் மூலமாகவும் நடந்தும் கடந்து செல்கின்றனர். இந்த பகுதியில் ரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ரயில்வே மேம்பாலம் அமைத்து தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் விரிகோடு பகுதிக்கு பதிலாக அதிகாரிகள் மாற்றுப்பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு  பேரூராட்சி தலைவர் பமலா தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் விஜய் வசந்த் எம்பி, கொல்லஞ்சி ஊராட்சி தலைவர் சலோமி, நட்டாலம் ஊராட்சி தலைவர் ராஜ்குமார், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி, பா.ஜ.க கட்சி தொண்டர் உமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |