இந்திய ரயில்வே நிர்வாகம் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் அனைத்தையும் நவீன முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக இலவசமாக வைபை எனப்படும் இணைய வசதி சேவைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு மும்பை ரயில் நிலையத்தில் இந்த இணைய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ரயில் நிலையங்களில் வழங்கப்படும் இலவச வைஃபை சேவை ஆபாசவீடியே பார்ப்பதற்கு ஏராளமானோர் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானாவின் செகந்திராபாத் உட்பட பல நகரங்களில் ரயில் நிலையங்களில் 35 சதவீதம் பேர் வைஃபை வசதியை தவறாக பயன்படுத்துவதை RailTel என்ற அமைப்பு கண்டுபிடித்து உள்ளது. பலர் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்ததும் தெரிய வந்துள்ளது.