ரயில் கடந்து செல்லும் போது தண்டவாளத்தில் படுத்துகொண்டு செல்போன் பேசும் பெண்ணின் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று கடந்து செல்கிறது. ரயில் சென்றவுடன் அது சென்ற தண்டவாளத்தில் பெண் ஒருவர் முகத்தை மூடியபடி படுத்திருந்தது தெரியவந்தது. கையில் பை ஒன்றை வைத்து கொண்டு சாதாரணமாக எழுந்துவரும் அவர் செல்போன் பேசிக்கொண்டே நடந்து செல்கிறார். இந்த வீடியோ இணையத்தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பதிவிட்ட IPL அதிகாரி திபான்ஷூ கப்ரா, உயிரை விட போன் பேசுவது தான் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவானது இதுவரையிலும் ஒரு லட்சத்திற்கும் மேலான பார்வைகளை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று இணையத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியை டேக் செய்து சிலர் அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी है 🤦🏻♂️ pic.twitter.com/H4ejmzyVak
— Dipanshu Kabra (@ipskabra) April 12, 2022