Categories
தேசிய செய்திகள்

ரயில் கட்டணங்கள் உயர வாய்ப்பு….. பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ரயில் பயணமே சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயிலில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரயில்களில் இனி இரண்டு பெட்டிகளை தவிர அனைத்தும் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் இந்த திட்டம் பாண்டியன், முத்துநகர், மலைக்கோட்டை, சோழன், பொதிகை, நீலகிரி உள்ளிட்ட ரயில்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தால் பயணிகள் இனி வேறு வழி இன்றி ஏசி பெட்டிகளில் பயணிக்க வேண்டிவரும். இதனால் கட்டணங்களும் கடுமையாக அதிகரிக்கும்.

Categories

Tech |