Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில் பயணிகள் வசதி, பராமரிப்பு பணிகள், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதனால் ரயில் புறப்படும் நேரம் மற்றும் வருகை புரியும் நேரம் ஆகியவை மாற்றியமைக்கப்படும். அவ்வகையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இன்று 8ம் தேதி சென்னை செண்ட்ரலில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்: 02269 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-நிஜாமுதீன் துரந்தோ ஸ்பெஷல் 3 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு புறப்படும். அதேபோல் காலை 6.15 மணிக்கு புறப்பட வேண்டிய கோயம்புத்தூர்-டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக காலை 7.45 மணிக்கு புறப்படும். இவ்வாறு தென்னக ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

Categories

Tech |