திருவனந்தபுரம் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, குருவாயூர்- புனலூர் ரயில் இன்று குருவாயூர்- திருச்சூர் இடையே பகுதியளவும், குருவாயூர்- திருவனந்தபுரம் தினசரி இன்டர்சிட்டி விரைவு ரயில் இன்று குருவாயூர்- திருச்சூர் இடையே பகுதியளவும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.