Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதி மின்சார ரயில் சேவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே பயணிகளின் நலன் கருதி தென்னக ரயில்வே நாளை சென்னை புறநகர் பகுதியில் இயங்கும் மின்சார ரயில் சேவையை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை தினம் என்பதால், சென்னை ரயில்வே கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின் படி இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்த விபரங்களை அறிந்துகொண்டு பயணிகள் தங்கள் பயணங்களை மேற்கொள்ளுமாறும் தென்னக ரயில்வே சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது மேலும் ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் எனவும் தென்னக ரயில்வே சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு முக கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |