Categories
மாநில செய்திகள்

“ரயில் சேவையில் திடீர் மாற்றம்”….. வெளியான அறிவிப்பால் முன்பதிவு செய்த பயணிகள் கடும் அதிர்ச்சி….!!!!

முக்கிய 7 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதால் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம், ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சேலம் ஜங்சன் ரயில் நிலையம் – மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் பாதையிலுள்ள இரண்டு ரயில்வே பாலங்களில் கட்டுமான பராமரிப்பு பணி ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுகிறது.  இதன்காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில்களின் இயக்கத்தில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, செகந்திராபாத்- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (07189) செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து (29/4/2022) இரவு 9.05 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 5 மணி நேரம் காலதாமதமாக நள்ளிரவு இரவு 2.05 மணிக்கு புறப்படும்.

ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) ஆலப்புழா ரயில் நிலையத்தில் இருந்து (30/4/2022) காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 3 மணி நேரம் காலதாமதமாக காலை 9 மணிக்கு புறப்படும்.

எர்ணாகுளம்- பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12678) எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து (30/4/2022) காலை 9.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 3மணி நேரம் காலதாமதமாக மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.

கோவை – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12676) கோவையில் இருந்து (30/4/2022) மதியம் 3.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் ஒரு மணி நேரம் காலதாமதமாக மாலை 4.15 மணிக்கு புறப்படும்.

திருவனந்தபுரம்- மும்பை சிஎஸ்எம்டி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (16332) திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து (30/4/2022) காலை 4.25 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 2 மணி நேரம் காலதாமதமாக காலை 6.25 மணிக்கு புறப்படும்.

எர்ணாகுளம்- செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07190) எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து (30/4/2022) இரவு 11.25 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 5 மணி நேரம் காலதாமதமாக (1/5/2022) காலை 4.25 மணிக்கு புறப்படும். இப்படி சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |