பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மானாமதுரை-மேல கொல்லங்குளம், திண்டுக்கல்-அம்பாதுரை, ராஜபாளையம்-சங்கரன்கோவில், சூடியூர்-பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை முதல் வருகின்ற 30-ஆம் தேதி வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து தாமதமாக மதியம் 1.30 மணிக்கு புறப்படும். மேலும் மதுரையில் இருந்து 12.30 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கு புறப்படும். இதனையடுத்து மானாமதுரை பயணிகள் ரயில் இரு மார்க்கங்களிலும் வருகின்ற 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிவகங்கை-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் நாளை முதல் வருகின்ற 30-ஆம் தேதி வரை செவ்வாய், வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.
அதேபோல் சென்னை-குருவாயூர் விரைவு ரயில் செவ்வாய், சனி ஆகிய கிழமைகளில் 70 நிமிட தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும். இந்நிலையில் ராஜபாளையம்-சங்கரன்கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் செங்கோட்டை ரயில் செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு மணிக்கு புறப்படும். மேலும் மதுரை பயணிகள் ரயில் நாளை முதல் வருகின்ற 30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் வருகின்ற 21, 22 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரயில் இரு மார்க்கங்களிலும் சாத்தூர்-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் வருகின்ற 30-ஆம் தேதி வரை மதுரை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்நிலையில் தென்காசி-செங்கோட்டை இடையே ரயில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வருகின்ற 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மதுரையிலிருந்து மாலை 5. 15 மணிக்கு புறப்படும் எனவும், செங்கோட்டை ரயில் நெல்லையிலிருந்து 6.15 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.