Categories
தேசிய செய்திகள்

ரயில் சேவையை நிறுத்தும் திட்டம் இல்லை… ரயில்வே வாரியம் விளக்கம்…!!!

இந்தியாவில் ரயில் சேவையை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா பரவ காரணமாக மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்படும் என தகவல் பரவியது. இதனை அடுத்து நாடு முழுவதும் ரயில் சேவையை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ எந்த திட்டமும் இல்லை. கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |