இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் பலரும் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்து பயணிக்கின்றனர். அப்படி ரயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ரயில் பயணிகள் ரீபண்ட் தொடர்பான விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் நீங்கள் திடீரென ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் உங்களுக்கு ரீபண்ட் பணம் கிடைக்காமல் போகலாம்.
நீங்கள் உங்களுடைய ரீபண்ட் தொகையை பெறுவதற்கு ஐ ஆர் சி டி சி விதிமுறை உள்ளது.அதன்படி சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு டிக்கெட்டை ரத்து செய்து இருந்தாலும் ரீபண்ட் உங்களுக்கு கிடைக்கும். ரயில்வே விதிமுறைகளின் படி டிக்கெட் டெபாசிட் ரசீதை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது உங்களுக்கு ரீபண்ட் தொகை வழங்கப்படும்.
- முதலில் IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctc.co.in என்ற இணையதளத்தில் செல்ல வேண்டும்.
- அதில் முகப்புப் பக்கத்தில் ’My account’ என்பதைக் கிளிக் செய்து ’My transaction’ என்பதைக் கிளிக் செய்து உள்ளே சென்றால் TDR ஆப்சனில் யாருடைய பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலையும் பார்க்கலாம்.
- உங்கள் PNR நம்பர், ரயில் எண் மற்றும் கேப்ட்சா குறியீடு ஆகியவற்றை நிரப்பி, கேன்சல் விதிகளின் பாக்ஸில் டிக் செய்து ‘submit’ கொடுக்க வேண்டும்.
- பின்னர் மொபைல் எண்ணுக்கு OTP நம்பர் வரும். அதைப் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
- PNR விவரங்களைச் சரிபார்த்து, டிக்கெட்டை சேன்சல் செய்யும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும். அங்கேயே ரீஃபண்ட் தொகை எவ்வளவு என்பதை நீங்கள் பார்க்கலாம்.
- ரீஃபண்ட் தொடர்பான தகவல் உங்களுடைய மொபைல் நம்பருக்கு SMS மூலமாக அனுப்பப்படும்.