பயணிகளுக்கு இலவசமாக ரயில் டிக்கெட் கொடுத்து கொரோனாவை பரப்பியதாக காங்கிரஸ் மீது மோடி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
கொரோனா முதல் அலையின் போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இலவசமாக ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதனால் அதிகமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலின் காரணமாக உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது என பிரதமர் மோடி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். கடந்த 50 வருடங்களில் இந்தியாவில் யாரும் இப்படிப்பட்ட வளர்ச்சியை கண்டதில்லை. காங்கிரஸின் இந்த செயலால் கொரோனா பரவ ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சியே உறுதியாக இருக்கிறது போலும். என பிரதமர் மோடி கூறியுள்ளார்.