Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் புக்கிங்…. இனி இதை செய்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும்….. புதிய விதிமுறைகள் அமல்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு முறையில் ஏற்படும் மாற்றங்களை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் மாற்றி உள்ளது. புதிய விதிகளின்படி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு உங்கள் கணக்கை சரிபார்க்க வேண்டும். ஆண்டு எண்ணில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன்பு பயனர்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியை சரி பார்க்க வேண்டும். அது இல்லாமல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.

கொரோனா தொற்று நோய் தொடங்கியதில் இருந்து ஐ ஆர் சி டி சி கணக்கிலிருந்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யாத பல பயணிகள்  இருக்கின்றனர். அவர்களுக்கு மட்டுமே இந்த விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முதலில் ஐ ஆர் சி டி சி ஆப் அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள verify ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைலில் நல்லது மின்னஞ்சல் ஐடி உள்ளிட வேண்டும். பிறகு வெரிஃபை பட்டனை கிளிக் செய்து உங்களின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிட வேண்டும். அதனைப் போலவே மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பிறகு உங்கள் இமெயில் ஐடி சரிபார்க்கப்படும். .

Categories

Tech |