பொதுவாக ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக ரத்து செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ அதற்கான பணத்தை திரும்பப் பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலமாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் அதற்கான பணத்தை திரும்பப் பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.
இதன் மூலமாக எப்படி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். இதற்கு ஐஆர்சிடிசி ஐபே வின் அதிகாரபூர்வ இணையதள முகவரியான www.irctc.co.in செல்ல வேண்டும். அதன்பின் பயணம் தொடர்பான முழு விபரங்கள், தேதி, நேரம் போன்றவற்றையும் சரியாக பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து நீங்கள் செல்லவேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் பணம் செலுத்துவதற்கு ஐஆர்சிடிசி ஐபே என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் பே அண்ட் புக் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இதனையடுத்து கிரெடிட், டெபிட் கார்டு அல்லது யுபிஐ விவரங்களை பதிவு செய்து பணத்தை செலுத்தலாம். உங்களுடைய டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் அது தொடர்பான குறுஞ்செய்தி உங்களுடைய தொலைபேசி நம்பருக்கு வரும். மேலும் இந்த செயலியை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் திடீரென டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உங்களுடைய பணம் உடனடியாக நீங்கள் பதிவு செய்த வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பப்படும்.