ரயில் தண்டவாளங்கள் அசுத்தமடைவதை தடுக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரணை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ரயில் தண்டவாளங்கள் கழிப்பறையாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் குடியிருப்புகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீரை கொட்டும் இடமாக பயன்படுத்தப்படக் கூடாது. ரயில்களில் உணவு விநியோகம் மற்றும் துப்புரவு போன்ற பணிகளுக்கு நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள்,கழிவு பொருட்களை ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் கொட்ட கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.