Categories
தேசிய செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் சிக்கி தவித்த பெண்…. அதிகாரியின் துரித செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

உத்தரபிரதேசத்தின் பிரோசாபாத் நகர ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் போகும் தண்டவாளத்தின் மீது பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த அப்பெண்  தண்டவாளத்தில் இருந்து நடைமேடைக்கு ஏற முயற்சி செய்துள்ளார். எனினும் அவரால் உடனே மேலே வர முடியவில்லை. ரயில் கடந்து செல்ல ஒரு சில வினாடிகளே இருந்த நிலையில், அப்பெண் நிலைமையை உணர்ந்து உதவிகேட்டு கத்தியுள்ளார்.

இந்நிலையில் ரயில்வே அதிகாரி ஒருவர் உடனே ஓடிசென்று கைகொடுத்து, அந்த பெண்ணை காப்பாற்றினார். இக்காட்சிகள் ரயில் நிலையத்திலிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதுபற்றி ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் சிவலால் மீனா கூறும்போது,”ஒரு பெண் ரயில்வே தண்டவாளத்தில் கடந்து போகும்போது நாங்கள் அவரை கவனித்தோம். ரயில் வந்து கொண்டிருந்தது. இதனால் நான் காப்பாற்றுவதற்காக ஓடி சென்றேன். மற்றொரு திசையிலிருந்து ரயில்வே அதிகாரி ஒருவரும் ஓடினார். மேலே ஏற முடியாமல் திணறிய பெண்ணை தக்கதருணத்தில் அதிகாரி மீட்டு காப்பாற்றியுள்ளார்” என கூறியுள்ளார்.

Categories

Tech |