மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் உள்ள மின்சார ரயில் புறப்பட்டுச் சென்றது. அப்போது பயணி ஒருவர் ஓடிவந்து ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதனை அங்கிருந்த ரயில்வே மோட்டார் மேல் ஒருவர் பார்த்தார்.
உடனே அவர் அங்கிருந்து ஓடி வந்து நொடி பொழுதில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த பயணி இழுத்து காப்பாற்றினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.