மகாராஷ்டிராவில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது .
மும்பையில் வாங்கனி ரயில்வே நிலையத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சியை இந்திய ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் அவரின் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், தன்னுயிரை பொறுப்பேற்காமல் குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரான மயூர் செல்கியின் துணிச்சலான செயலை கண்டு பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.
Very proud of Mayur Shelke, Railwayman from the Vangani Railway Station in Mumbai who has done an exceptionally courageous act, risked his own life & saved a child's life. pic.twitter.com/0lsHkt4v7M
— Piyush Goyal (@PiyushGoyal) April 19, 2021
அந்த வீடியோவில் ரயில் நடைபாதையில் தாயின் கையை பிடித்துக்கொண்டு விழும்பில் நடந்து சென்ற குழந்தை திடீரென்று தண்டவாளத்தில் தவறி விழுகிறது. உடனே மயூர் செல்கி அந்த குழந்தையை ஓடி வந்து தூக்கி நடைமேடையில் தள்ளிவிட்டு அவரும் நடைமேடையில் ஏறி தப்பிக்கிறார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. அனைவரும் மயூரின் இந்த துணிச்சலான செயலை பாராட்டி வருகின்றனர்.