உடல் ஊனமுற்றவர் மிகவும் கடுமையாகத் தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்ப்போரை கோபமடைய செய்துள்ளது
சுவிசர்லாந்தில் சூரிச் என்ற பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாகி ஏற்படுத்தியுள்ளது. சூரிச் ஓரிகான் பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் இந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளியான காணொளிப் பதிவில் உடல் ஊனமுற்ற ஒருவரை மர்ம நபர் மிகவும் மோசமாக தாக்குகிறார். ஊனமுற்றவர் என்றும் பாராமல் அவரை எட்டி மிதிக்கிறார். இதனால் வலி தாங்காமல் அந்த நபர் தரையில் ஊர்ந்து செல்கின்றார். அந்த ஊனமுற்றவர் முகம் முழுவதும் ரத்தமாக உள்ளது. இந்த சம்பவம் நடக்கும்போது பொதுமக்கள் கடந்து செல்லும் காட்சியையும் காண முடிகின்றது. அவர் தாக்கப்பட்ட காரணம் இதுவரை தெரியவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அது முதல் பல்லாயிரகணக்கான மக்கள் வெளியான வீடியோவை பார்த்துள்ளனர். பலர் அனுதாபம் தெரிவித்தும் சிலர் வீடியோ எடுத்தவரை ஒருவர் தாக்கப்படும்போது காப்பாற்றாமல் இப்படி வீடியோ எடுப்பார்களா என கேள்வி கேட்டும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ சூரிச் நகர காவல் துறையினரின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரிக்க முடிவு எடுத்துள்ளனர். வீடியோவை பதிவிட்டவர் அது குறித்த வேறு எந்த தகவலையும் அதில் குறிப்பிடவில்லை.