இரண்டு ரயில் நிலையத்திற்கு இடையே கிடந்த சடலம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவிட்சர்லாந்து பாஸல் மண்டலத்தில் இன்று காலை 6.15 மணியளவில் எஸ்பிபி மற்றும் எஸ் ஜான்சன் என்ற இரு இரயில் நிலைங்களுக்கு நடுவே சடலமொன்று கிடைப்பதை ரயில் பணியாளர் ஒருவர் கவனித்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக காவல்துறையினருக்கும் அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல்துறையினர் அளித்த பேட்டியில் மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் எப்படி இறந்தார் என்று தெரியும் எனவும் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக தகவல் தெரிந்தால் பொதுமக்கள் மண்டல காவல்துறையினரை அணுக வேண்டும் என்று கூறினர்.