Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் திடீர் சோதனை…. கொத்தடிமைகளாக வந்த சிறுவர்கள் மீட்பு…. திருச்சியில் பரபரப்பு…!!

கொத்தடிமைகளாக அழைத்து வந்த 7 சிறுவர்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பெட்டியில் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டு கிடந்த குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதே போல் 7 குழந்தை தொழிலாளர்களை அழைத்து கொண்டு அந்த ரயிலில் இருந்து இறங்கிய 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் 7 சிறுவர்களையும் கட்டிட பணிக்கு கொத்தடிமைகளாக அழைத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 7 சிறுவர்களையும் மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்தில் ஒப்படைத்துவிட்டனர். மேலும் புரோக்கராக செயல்பட்ட அந்த 3 பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |