சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் மணிகண்டன், புவனேஸ்வர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.