Categories
உலகசெய்திகள்

ரயில் நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்…. 30 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!!

உக்ரைன் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்ய ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தியிருக்கிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து 43 வது நாளாக நடத்தி  வருகிறது. தலைநகராகிய கிவ்  உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும்  ரஷ்யாவின் கனவு, உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் உருக்குலைந்து போய் உள்ளது. இருப்பினும்  ரஷ்யாவின் தொடர்ந்து மூர்க்கத்தனமான தாக்குதலை தொடர்ந்த படி இருக்கிறது.

உக்ரைனும் கடுமையாக எதிர்ப்பதால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிராம நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்ய ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்  என அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதல் நடத்திய இந்த ரயில் நிலையம் வழியாகத்தான் மீட்பு பணிகள் நடைபெற்று வந்திருக்கிறது.

Categories

Tech |